தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று 604 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 19,634 ஆண்களும், 12,016 பெண்களும், 17 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,149ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 44 அரசு மற்றும் 32 தனியார் மையங்கள் என மொத்தம் 76 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று மட்டும் 16,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 5,72,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 14,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.