Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 1,358 பேர்… முதல்வர் பினராயி விஜயன்!!

கேரளாவில் இன்று மேலு 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக பலி எண்ணிக்கை கேரளாவில் 21 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 29 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், மகாராஷ்டிரா -12, டெல்லி -7, தமிழ்நாடு -5, ஹரியானா -2, குஜராத் -2 மற்றும் ஒடிசாவில் இருந்து வந்த ஒருவர் என 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேருக்கு தொடர்பு மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,697 ஆக அதிகரித்திருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் நேற்று வரை 1,324 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Categories

Tech |