தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 44,094 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 56.28% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3வது நாளாக உச்சத்தை தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 78,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.308% ஆக உள்ளது.
இதுவரை கொரோனவால் 48,364 ( 61.71% ) ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 29,968 பேர் (38.25%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 21 பேர் (0.026%) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,213 ஆக அதிகரித்துள்ளது.