Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 752ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 27 பேரும், சேலம் – 5, நாமக்கல் – 4, விருதுநகர் – 3, திண்டுக்கல் – 3, மதுரை – 2 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 33 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

23 மையங்கள் அரசு மருத்துவமனையிலும், 10 மையங்கள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,303 பேரும் அரசு கண்காணிப்பில் 106 பேர் உள்ளனர். மேலும் 87,159 பேர் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |