Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரிக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழையில் நனையச் செய்த அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.

மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க நடிகை. அவரால் அரச குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அரச குடும்பத்திலிருந்தே வெளியேறுவதாக அறிவித்து, ஹாரி-மேகன் இருவரும், அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.

இது, பிரிட்டன் மக்களை வருத்தமடையச்செய்தது. இதில், பெரிதும் வருத்தமடைந்தது, மகாராணியார் தான். எனினும், ஹாரி வீட்டில் ஒரு நல்ல செய்தி நடந்தால் முதல் நபராக மகாராணியார் தான் வாழ்த்துக்கூறுகிறார். இளவரசர் ஹாரிக்கு குழந்தைகள் பிறந்த சமயத்திலும், மகாராணியார் தான் முதல் நபராக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தற்போதும், தன் பேரனின் பிறந்தநாளிற்கு, முதல் நபராக மகாராணியார் தான் வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும், தன் பேரனின் பழைய புகைப்படங்களையும் பதிவிட்டு, வாழ்த்தியிருக்கிறார். அதனையடுத்து, ஹாரியின் தந்தையான இளவரசர் சார்லஸ், சகோதரர் இளவரசர் வில்லியம் மற்றும் அண்ணியார், இளவரசி கேட் மிடில்டன் என்று அனைவரும் ஹாரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |