Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இன்று மட்டும் இறப்பு விகிதம் சுமார் 3.2% ஆக உள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.7% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த காலகட்டங்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது”. நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் விகிதம் குறித்து பேசிய அமைச்சர் கூறியதாவது, ” COVID19-க்கு எதிரான போராட்டத்தில் நம் நாட்டின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவு என்று கூறியுள்ளார்.

இன்று மட்டும் இறப்பு விகிதம் சுமார் 3.2% ஆக உள்ளது. பல மாநிலங்களில் இறப்பு விகிதம் இதைவிடக் குறைவாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய இறப்பு விகிதம் சுமார் 7 முதல் 7.5% ஆக இருக்கிறது” என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |