இன்றைய பஞ்சாங்கம்
05-03-2020, மாசி 22, வியாழக்கிழமை,
தசமி பகல் 01.19 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.26 வரை பின்பு புனர்பூசம்.
மரணயோகம் பகல் 11.26 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.
வாஸ்து நாள்.
மனை பூஜை செய்ய உகந்த நேரம் காலை 10.30 மணிக்கு மேல் 11.06 மணிக்குள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன்
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். இல்லத்தில் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணம் மற்றும் ஆடை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை குறைந்து ஒற்றுமை பலப்படும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் மூலம் வீட்டில் ஒற்றுமை குறைவடையும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும் நேரத்தில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வயதில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். பணியில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்வது உயர்வு கொடுக்கும்.
மிதுனம்
இன்று திடீர் தனவரவு ஏற்படும். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகள் மூலம் இனிய செய்திகள் வந்து சேரும். பணி தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளக் கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும்.
கடகம்
இன்று உடல்நலம் குறைவின் காரணமாக சிறிய தொகையை செலவிட கூடும். பணியில் சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை உருவாகும். இல்லத்தில் பெண்களால் நன்மை நடக்கும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் பெரியவர்களின் உதவியுடன் முடிவடையும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் மூலம் சுபச்செலவுகள் செய்யக்கூடும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடப்பர். பணி தொடர்பாக பெரிய மனிதர்களுடன் சந்திப்பு நடக்கும். தொழிலில் இருந்துவந்த மந்தமான நிலை விலகும்.
கன்னி
இன்று திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள் கிடைக்கப் பெற்று ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறும். தொழிலில் புதிதாய் பங்குதாரர்கள் இணைவதால் லாபம் அதிகரிக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
துலாம்
இன்று இல்லத்தில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி அமைதியான சூழலை சீர்குலைக்கும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். உடல்நல பாதிப்புகள் நீங்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தின் வளர்ச்சிக்கு உதவிபுரியும்.
விருச்சிகம்
இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் இருக்கும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். அதனால் பிரச்சினைகள் விலகும். சுப நிகழ்ச்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது சிறந்தது. நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
தனுசு
இந்தத் தொழிலில் பொருளாதார நிலை சிறந்த அளவில் இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து விடும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். பணியில் எதிர்பார்த்த சலுகைகள் இன்று கிடைக்கும். நினைத்த காரியம் விரைவாக முடிவடையும். மனைவியின் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
இன்று உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பெரியவர்களின் நட்பு கிடைக்கப்பெறும். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப் பிரச்சனைகள் விலகி நிம்மதியான சூழல் உருவாகும்.
கும்பம்
இன்று தொழில் தொடர்பான பொருளாதார நிலை மந்தமாகவே காணப்படும். பயணங்களினால் தேவையற்ற அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். தொழில் நுட்பக் கருவிகளை வாங்கும் பொழுது கவனமுடன் இருப்பது சிறந்தது. பூர்வீக சொத்துக்களில் நன்மை நடக்கும். கடன் பிரச்சனைகள் விலகி விடும்.
மீனம்
இன்று நெருங்கியவர்களிடம் சிறிய மனவருத்தங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் சேமிப்பு குறையும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை நடக்கும். இழுபறியாக இருந்த கடன்கள் வசூலாகும். தான தர்ம காரியங்கள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.