இன்றைய பஞ்சாங்கம்
21-02-2020, மாசி 09, வெள்ளிக்கிழமை,
திரியோதசி மாலை 05.21 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
உத்திராடம் நட்சத்திரம் காலை 09.13 வரை பின்பு திருவோணம்.
சித்தயோகம் காலை 09.13 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
மகா சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் அகன்று வருமானம் அதிகரிக்கும்.. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிதாய் வேலை வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் நிம்மதியற்ற சூழல் உருவாகும். பெரியவர்களின் நட்பு வியாபார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரியும். பிள்ளைகளினால் மனவருத்தங்கள் ஏற்படும். பணவரவு போதுமான அளவில் இருக்கும். உறவினர்கள் பிரச்சினைகளில் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வீக வழிபாடு நன்மையை கொடுக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் திறமைக்கேற்ற பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் நிதானத்துடன் செயல்படுவது நன்மையை கொடுக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படும். உணவில் கட்டுப்பாடு தேவை. வெளியூர் பயணங்களை தவிர்த்துவிடுவது நன்மை கொடுக்கும்.
கடகம்
இன்று இல்லத்தில் அமைதியான சூழல் நிலவும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். பெண்கள் புதிதாய் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்த அரசு உதவி இன்று கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று செய்யும் அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் நன்மை நடக்கும். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர்கள். பொருளாதார நிலை இன்று சிறந்த அளவில் இருக்கும்.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இல்லத்தில் சுப காரியங்கள் உறவினர்களின் உதவியினால் நடந்தேறும். தொழிலில் புதிதாய் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம் அமையும்.
துலாம்
இந்த இல்லத்தில் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும். கடன் பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளிடம் கருத்து வேற்றுமை தோன்ற வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
விருச்சிகம்
இன்று திடீர் பணவரவு ஏற்படும் வீட்டில் பெரியவர்கள் உங்களை பாராட்டுவார்கள். நண்பர்களை சந்திப்பதினால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் இருந்துவந்த பொறாமை மற்றும் போட்டி அகன்று லாபம் அதிகரிக்கும்.
தனுஷ்
இன்று வியாபாரம் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணி தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகும் நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.
மகரம்
இன்று பிள்ளைகள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய செய்தி இல்லம் தேடிவரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல பலனைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நாள் இருந்து வந்த நெருக்கடிகள் அகலும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் தடையும் தாமதமும் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் கருத்தும் கருத்து வேற்றுமை ஏற்படும். பணியில் இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்துக் கொண்டு கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துவது நன்மை கொடுக்கும் .வியாபாரத்தில் சிறிய மாற்றங்கள் செய்வதால் பெரிய லாபத்தை அடைய முடியும்.
மீனம்
இன்று இல்லத்தில் பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். பயணங்கள் மூலம் நன்மை நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும் வருமானம் இரட்டிப்பாகும்.