நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷ இராசிக்காரர்கள் இன்று ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். உங்களால் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட முடிவடைய தாமதம் ஆகும். இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவழிக்க நேரிடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம் :
ரிஷப இராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலே நல்ல செய்தி கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். உங்களுக்கான போட்டி பொறாமை குறையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மிதுனம் :
மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று தீரும். உங்களுக்கு வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கடகம் :
கடக இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்களை தடை இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் உத்தியோக ரீதியான பயணங்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
சிம்மம் :
சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் உங்களுக்கான வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உங்களின் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி :
கன்னி இராசிக்காரர்களுக்கு இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பு இருக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களின் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உங்களின் வேலை பணிச்சுமை குறையும். நிலுவையில் இருக்கும் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
துலாம் :
துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் நாளாக அமையும். நடத்தும் தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் பயணம் வாய்ப்பு அமையும். உங்களின் வியாபாரத்தில் இதுவரை வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம் :
விருச்சிக இராசிக்காரர்களுக்கு இன்று புது பொலிவும், தெம்பும் இருப்பதாய் காணப்படுவீர்கள். உங்களின் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவில் திருப்தி ஏற்பட்டு புதிய பொருட் சேர்க்கைக்கான வாய்ப்பு கிட்டும்.
தனுசு :
தனுசு இராசிக்காரர்கள் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்களை தேடி வீண் பிரச்சினைகள் வந்து சேரும் . உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெற்று வருவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக கவனமுடன் பேச வேண்டும். அதே போல வாகனங்களில் செல்லும் பொழுதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிக நல்லது.
மகரம் :
மகர இராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் நல்ல அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உங்களின் வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
கும்பம் :
கும்ப இராசிக்காரர்களுக்கு இன்றைய தினத்தில் பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக உங்களுக்கு இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் குடும்பத்தினருடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மீனம் :
மீன இராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்களின் பிள்ளைகளினால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களின் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலனை அடைந்து மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் புதிதாக பொருட்கள் வாங்குவதில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.