மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாளாக இருக்கும். நாணயத்தை இன்று கூடுமானவரை காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து, வருமானம் கூடுதலாகவே இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதிற்கு இதத்தை கொடுக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை கொஞ்சம் வெளிப்படும். பாராட்டுகளும் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் உழைப்பு அதிகமாகவே இருக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கூடுதல் கவனம் இருப்பது மட்டும் எப்போதுமே அவசியம். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் சில விஷயங்களை கையாளும் பொழுது நீங்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அதை கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட ஓரளவு சிறப்பு இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
செயல்பாடுகளிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் செய்யுங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று குதூகலம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டும் விதமாக காரியம் ஒன்றை செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல்கள் வந்து சந்தோசத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். பணவரவு அதிகமாகி உங்களுடைய பொருளாதாரம் உயரும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்.
கட்டுப்பாடற்ற சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். இன்று செய்கின்ற காரியங்கள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு நீடிக்கும். திருமண முயற்சிகள் சிறப்பாக நடக்கும். சுபகாரிய பேச்சுக்கள் இல்லத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அது போலவே வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாளாகவே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை. சிறப்பான முன்னேற்றம் இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று சிந்தனைகள் வெற்றிபெற சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பான பயணம் செல்ல நேரிடும். போட்டிகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் அனுசரித்து செல்வது நல்லது.
அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், மேற்கொண்டு சிறப்பாக இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். இதனால் சில விஷயங்கள் சிறப்பாக உங்களுக்கு நடந்து முடியும். இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பயணம் ஓரளவு அலைச்சலை கொடுக்கக் கூடியதாக இருந்தாலும் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
இன்று மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை ஓங்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக இருக்கும்.
கடக ராசி அன்பர்களே…!! இன்று நூதன பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருள்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது.
அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். வேலைகளை கவனமுடன் செய்யுங்கள், பொறுமையாக செய்யுங்கள், நிதானமாக செய்யுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. இருந்தாலும் படிக்கும் பொழுது படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும்.
முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். கடன் பிரச்சினைகளில் இருந்தும் நீங்கள் இன்று விடுபடுவீர்கள். அதுமட்டுமில்லாமல் கடன்களை அடைக்க கூடிய சூழலும் இன்று இருக்கு. இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். அக்கம்பக்கத்தினர் இடமும் அன்பு அதிகரிக்கும். இன்று செய்யும் செயலில் நேர்த்தியும் இருக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக காணப்படக் கூடிய சூழல் இருக்கு. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். தடைகள் விலகி செல்லும்.
அவர்கள் செய்யும் விஷயங்கள் அனைத்துமே சிறப்பாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் சேர வழிபட்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
கன்னிராசி அன்பர்களே…!! இன்று பெருமைகள் வந்து சேர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வார்த்தைகளில் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது.
மற்றவர்களிடம் சிறிதாக கருத்து வேற்றுமை வரக்கூடும். கருத்து வேற்றுமை வராமல் பாதுகாத்திடுங்கள். இன்று வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பீர்கள். அதுமட்டுமின்றி வாழ்க்கை துணைக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியான நிலை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் அனைத்துமே சரியாகும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு மன அமைதி இன்று கூடும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் வந்து சேரும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக கூடும். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவும். துன்பங்கள் ஓரளவு விலகிச்செல்லும்.
மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆன்மீக தளங்களுக்கு சென்று வருவதற்கான சூழலும் அமையும். தெய்வத்திற்காக சிறு தொகையை இன்று செலவிட நேரிடும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைத்து விஷயங்களுமே சரியாக நடக்கும். குடும்பத்தாருடன் இன்று வெளியிடம் சென்று பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்கி குவிப்பீர்கள். பிள்ளைகள் மீது ரொம்ப அன்பாக நடந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு சிறப்பு இருக்கும்.
கூடுமானவரை கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்காரத்தையும் நீங்கள் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் இன்று நடக்கக்கூடிய விஷயங்களில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். தயவுசெய்து இதை செய்வதற்கு பழகிக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். திருமண முயற்சி கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகலிரவாக பாடுபட்டவருக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் பன்மடங்கு உயரும். வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் நிறுவன பங்குகள் இன்று உயரக் கூடிய வாய்ப்புகள் இருக்கு.
ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடும். அதேபோல கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரவு வந்து சேரும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கக்கூடும். இன்று புதிய வாய்ப்புகள் கூட உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆனால் சரியான வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றார்போல் நடைமுறை படுத்திக்கொள்ளுங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எந்த செயலையும் விழிப்புணர்ச்சியுடன் செய்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். இன்று அடுத்தவரின் குறைகளை போக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவியும் கிடைக்கும். பணம் வரவு அதிகரிக்கும்.
அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான நன்மைகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தையில் கூட உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி துறை சார்ந்து பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதே போல கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. மனம் சந்தோசமாகவே காணப்படும்.
குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும் இன்று இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள்
மகர ராசி அன்பர்களே,,!! இன்று பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் கொடுப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். இன்று அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கூட நடக்கும்.
அதே போன்று நீங்கள் செய்கின்ற வேலையில் மிகவும் நேர்த்தியான சூழல் அமையும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்றைய பயணம் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். நல்ல அனுபவத்தையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். குடும்பத்தாரிடம் மட்டும் கொஞ்சம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே படித்த பாடத்தை நன்றாக எழுதி பார்ப்பது ரொம்ப நல்லது. எழுதி பார்ப்பதினால் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடந்து முடியும். அதுபோல இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கனான அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
கும்பராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வாய்ப்புகள் வாயில் தேடி வரக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நிலம் வீடு சம்பந்தமாக எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் நல்ல முடிவாக இருக்க கூடும். நிதானமாக பேசி செய்யும் காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் பணவரவு இன்று தாராளமாகவே இருக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கும். ஆசியும் கிடைக்கும்.
இன்று கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, அன்பாகவே காணப்படுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். இல்லம் செழித்து வளரும் நாளாக இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சி அனைத்துமே எல்லா விஷயங்களுமே இன்று உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். இருந்தாலும் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் யாருக்கும் கடன்களும் வாக்குறுதிகளையும் நீங்கள் இன்று கொடுக்க வேண்டாம்.
இதில் மட்டும் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். அதே போல வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். இதை நீங்கள் கடைப்பிடித்தாலே ரொம்ப முக்கியமானதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
மீனராசி அன்பர்களே…!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். வழக்கமாக செய்யக்கூடிய பணியை இன்று நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும்.
உங்கள் செயல் திறமை வெளிப்படும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். ஆதாய பணவரவு இருக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். சகோதர வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கவனமாக படியுங்கள். உழைத்து படியுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் இன்று வழிபட்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்