பார்லி மசாலா சாதம்
தேவையான பொருட்கள் :
பார்லி – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பட்டை – 1
கிராம்பு – 1
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பார்லி மற்றும் பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு , வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பார்லி மசாலா சாதம் தயார் !!!