கொண்டைக்கடலை மசாலா
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 சிட்டிகை
தேங்காய்ப் பால் 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் , தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூள் , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, மிதமான தீயில் கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கொண்டைக்கடலை மசாலா தயார் !!!