ஃப்ரூட்ஸ் அடை
தேவையான பொருட்கள் :
அரிசி – 1/2 கப்
ஆப்பிள் – 1/2 கப்
அன்னாசி – 1/2 கப்
திராட்சைப்பழம் – 1/2 கப்
கடலைப்பருப்பு – 50 கிராம்
உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் உப்பு, ஆப்பிள், அன்னாசி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும் . பின் தோசைக் கல்லில் எண்ணெயை விட்டு அடைகளாக ஊற்றி சுட்டு எடுத்தால் வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்!!!