பழ பாயசம்
தேவையான பொருட்கள் :
சேமியா- 1 கப்
ஆரஞ்சு – 1
அன்னாசி – 2 ஸ்லைஸ்
மாதுளை – 1/4 கப்
கொய்யா – 1
திராட்சை – 15
பால் – 1 கப்
சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பழங்களை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய சாறுடன், காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, பழம் பால் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!!!