பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு
தேவையான பொருட்கள் :
பச்சைப் பட்டாணி – 2 கப்
காலிஃப்ளவர் – 2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 5
கடுகு – 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் ஆகியவற்றை தனித்தனியாக வேகவைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை , வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பின்னர் மிளகாய்த்தூள் , தனியாத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு எண்ணெய் தெளிய இறக்கினால் பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு தயார் !!!