Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – மிளகு தானிய சூப்!!!

மிளகு தானிய சூப்

தேவையான  பொருட்கள் :

பாசிப்பருப்பு –  1  கப்

மிளகு –  2 டீஸ்பூன்

பிரியாணி இலை –  3

வெங்காயம் –  4

நறுக்கிய கேரட் – 1/2 கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள்  –  1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் –  1 சிட்டிகை

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி –  சிறிதளவு

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

மிளகு சூப் க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை , நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் . பின் இதனுடன் மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.வெந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கினால் மிளகு தானிய சூப்  தயார் !!!

Categories

Tech |