உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 5
தக்காளி – 2
வெங்காயம் – 2
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி , காய்ந்த மிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். இதனுடன் நறுக்கிய தக்காளி , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் . இதனுடன் வேக வைத்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு தயார் !!!