கோதுமை எனெர்ஜி ட்ரிங்க்
தேவையான பொருட்கள் :
கோதுமை – 50 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 3
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 2 பல்
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை மற்றும் பாசிப்பருப்பை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமாறினால் சுவையான கோதுமை எனெர்ஜி ட்ரிங்க் தயார் !!!