Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – நவரத்தின புலாவ்

நவரத்தின புலாவ்

தேவையான  பொருட்கள் :

சாமை அரிசி – 1 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் –  2

ஏலக்காய்  –  1

பட்டை  –  1

பிரியாணி இலை  –  1

லவங்கம் – 1

கேரட்  –  1

காலிஃப்ளவர்  , பச்சைப் பட்டாணி , பீன்ஸ் கலவை –  1 கப்

குடமிளகாய்  – 1

இஞ்சி-பூண்டு விழுது – 1  டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் –  1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

samai arisi pulavக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில்  சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ள  வேண்டும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் , இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் , வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க  வேண்டும் . பின் ஊற வைத்த சாமை அரிசி , தேவையான தண்ணீர் , உப்பு சேர்த்து  3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கி , சாதத்தில்  சேர்த்துக் கிளறிப் பரிமாறினால் சுவையான நவரத்தின புலாவ் தயார் !!!

Categories

Tech |