Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 11.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

11-02-2020, தை 28, செவ்வாய்க்கிழமை,

திரிதியை பின்இரவு 02.53 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

பூரம் நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு உத்திரம்.

சித்தயோகம் பகல் 02.23 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன்

மேஷம்

இன்று நண்பர்கள் வழியில் நற்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்து வந்த மனவருத்தம் அகலும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்கும் முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும்.

ரிஷபம்

இன்று இல்லத்தில் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். உறவினர்களால் மன வருத்தம் உருவாகும். எதிர்பார்த்து இருந்த உதவி கிடைக்க தாமதமாகும். தொழிலில் மந்தமான நிலை விலகி லாபம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் நல்ல பலன் கிடைக்கும். தெய்வீக வழிபாடு நன்மை கொடுக்கும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். உடன் பிறந்தவர்களால் நன்மை நடக்கும். பணியில் சிலருக்கு எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

கடகம்

இன்று பணவரவு ஓரளவு இருக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் தாமதமான நிலை ஏற்படும். பணியில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையால் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை அகலும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு இன்று கிடைக்கும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் சுபச் செலவுகள் இருக்கும். உடல்நலம் சிறப்பாகவே இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். தொழிலில் பெரியவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு பணி தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தமான நிலை  காணப்படும். உடல் நலத்திற்காக சிறிய தொகையை செலவிட கூடும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் காணப்படும். பெற்றோரின் ஆறுதலான சொற்கள் நம்பிக்கையை கொடுக்கும். எதிலும் பொறுப்புடன் செயல்படுவது நன்மையை விளைவிக்கும்.

துலாம்

இன்று கடினமான செயலையும் துணிவுடன் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்தடையும். பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றார்போல் பதவி உயர்வு அமையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களால் நன்மை நடக்கும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளினால் பொருளாதார முன்னேற்றம் காணப்படும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்துவந்த பொறாமை போட்டி அகலும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை மேலதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிரிகளினால் அவ்வப்போது பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவளிப்பார்கள். பண பிரச்சனைக்கு உறவினர்கள் உதவுவார்கள்.

மகரம்

உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனக்குழப்பம் இருக்கும். தேவையற்ற வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகளை இன்று தவிர்த்திடுங்கள். சுப முயற்சிகளை காலம் கடத்தி வையுங்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம்

இன்று நினைத்த அனைத்து காரியங்களும் எளிதாக நிறைவேறும். பிள்ளைகளினால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆபரணம் மற்றும் ஆடை வாங்கி சேர்ப்பீர்கள். புதிதாய் வியாபாரம் தொடங்கும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

மீனம் 

இன்று இல்லத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச்செய்திகளினால் ஆனந்தம் பொங்கும். புதிய நபர்களின் அறிமுகம் இன்று கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். தொழில் வியாபாரம் சிறந்த அளவில் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |