இன்றைய பஞ்சாங்கம்
20-02-2020, மாசி 08, வியாழக்கிழமை,
துவாதசி மாலை 04.00 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
பூராடம் நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு உத்திராடம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 1/2.
பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று இல்லத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். நண்பர்களின் ஆலோசனை மூலம் தொழிலில் இருந்த மந்தமான நிலை அகன்று முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்
இன்று உங்களின் பொருளாதார நிலை போதிய அளவில் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் சிறிய மன வருத்தங்கள் ஏற்படும். பகல் 1 . 52 வரை உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் தொழில் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
மிதுனம்
இன்று வீண் டென்ஷன் மற்றும் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பகல் 1.52 மணிக்கு மேல் உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பிக்க இருப்பதால் செய்யும் அனைத்து காரியங்களிலும் காலதாமதம் ஏற்படும். பணியில் மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்திடவும். திருமணம் போன்ற சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நன்று.
கடகம்
இன்று அதிகாலையிலேயே மகிழ்ச்சி தரும் செய்திகள் இல்லம் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறும். ஆபரணம் மற்றும் ஆடை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காணப்படும்.
சிம்மம்
இன்று இல்லத்தில் பொருளாதாரம் தொடர்பாக இருந்து வந்த நெருக்கடிகள் அகலும். உடல்நலத்தில் இருந்துவந்த பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய மாற்றங்கள் செய்வதால் பெரிய அளவில் லாபத்தை அடையமுடியும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவார்கள்.
கன்னி
இன்று செய்ய நினைக்கும் எந்த காரியத்தையும் கவனத்துடன் செய்வது நன்மை கொடுக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய கருவிகள் வாங்குவதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களினால் சோர்வு ஏற்படும். பெரியவர்களின் அறிமுகத்தால் நன்மை நடக்கும்.
துலாம்
இன்று இல்லத்தில் குடும்பத்தினரிடையே ஒற்றுமை கூடும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களால் நன்மை நடக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். சிலர் புதிதாக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு போதுமானதாக இருக்கும். வீட்டின் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொழில் தொடர்பாக எடுக்கும் அனைத்து முயற்சியிலும் நன்மை நடக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும்.
தனுசு
இன்று செய்யும் அனைத்து செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிதாய் வாய்ப்புகள் அமையும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வீட்டின் தேவைகளை நிவர்த்தி செய்வீர்கள்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தொழிலில் மந்தமான நிலையே காணப்படும். நண்பர்களின் உதவியினால் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் இன்று நிவர்த்தியாகும்.
கும்பம்
இன்று இல்லத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இன்று நிறைவேறும். திடீர் பணவரவு இருக்கும்.
மீனம்
இன்று உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் நிலவும். மனதிற்கு ஆனந்தம் தரும் செய்திகள் வீடு வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும். பிரச்சனைகள் தீர உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் காணப்படும்.