இன்றைய பஞ்சாங்கம்
08-03-2020, மாசி 25, ஞாயிற்றுக்கிழமை,
திரியோதசி திதி காலை 06.31 வரை பின்பு சதுர்த்தசி திதி பின்இரவு 03.04 வரை பின்பு பௌர்ணமி.
ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.52 வரை பின்பு மகம் நட்சத்திரம் பின்இரவு 04.10 வரை பின்பு பூரம்.
சித்தயோகம் காலை 06.52 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 04.10 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
மாசிமகம்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
லஷ்மிநரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எமகண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் -காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம்02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிப்பலன் – 08.03.2020
மேஷம்
இன்று உடல் நலத்தில் சற்று மந்தமான நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுப செலவுகள் இருக்கும். உதவிகள் காலதாமதமாக கிடைக்கப்பெறும். ஆடை ஆபரணம் வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும்.
ரிஷபம்
இன்று இல்லத்தில் மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொலைதூர பயணங்களினால் டென்ஷன் அலைச்சல் ஏற்படும் சேமிப்பு குறைவடையும். நிதானத்துடன் செயல்படுவதால் வரும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையினால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கப் பெறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தங்கள் அகன்றுவிடும். பழைய நண்பர்களை சந்திக்க ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
இன்று உடல் நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் இல்லத்தில் தேவையற்ற பிரச்சனை ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் சேமிப்பு குறையும். சிக்கனத்தை கடைபிடிப்பது பணப் பற்றாக்குறையை தவிர்க்கலாம். முன்கோபத்தை கைவிடுவது நல்லது.
சிம்மம்
இன்று பயணங்களினால் நன்மை நடக்கும். வெளிவட்டார நட்பு விரிவடையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
கன்னி
இன்று எண்ணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீண் பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளினால் தேவையற்ற செலவுகள் இருக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும்.
துலாம்
இன்று சுபச்செலவுகள் இருக்கும் உடல் நலம் சிறந்த அளவில் காணப்படும். தர்மம் தானம் போன்ற காரியங்களை செய்து ஆனந்தம் கொள்வீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். ஆபரணம் ஆடை வாங்குவதில் பெண்கள் நாட்டம் கொள்வீர்கள். புதிதாய் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும். செய்திகள் வீடு வந்து சேரும் இல்லத்தில் கணவன் மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை அகலும். தொழிலில் புதியவர்களின் அறிமுகத்தால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
இன்று எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் சிறிய தடை ஏற்படும் நண்பர்களுடன் கருத்து வேற்றுமை உருவாகும். உடல்நலத்தில் புதிய அதிக கவனம் தேவை பொறுப்புணர்ந்து செயல்படுவதால் கடன் பிரச்சினை குறையும். பூர்வீக சொத்துக்களால் நன்மை நடக்கும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று வீண் மன உளைச்சல் ஏற்படும். இராசியில் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உடல்நலத்தில் கவனம் அவசியம். தொழிலில் அடுத்தவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம். வெளியிடங்களில் அமைதி காப்பது நன்று.
கும்பம்
இன்று இல்லத்தில் ஒற்றுமை நிறைந்த சூழல் உருவாகும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். பெண்களின் நீண்ட நாள் ஆசை நிறைவடையும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று தொழிலில் முன்னேற்றத்துக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல பலனைக் கொடுக்கும். பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். இல்லத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உள்ளது.