Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 09.03.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

09-03-2020, மாசி 26, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.17 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.09 வரை பின்பு உத்திரம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.ஜீவன் – 1.

பௌர்ணமி.

ஹோலி பண்டிகை.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எமகண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் –  09.03.2020

மேஷம்

இன்று வரவை விட செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இல்லத்தில் இருப்பவர்களிடம் சிறிய மனவருத்தம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வதால் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்று.

ரிஷபம்

இன்று இல்லத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் கொடுக்கும். பணியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்பொழுது மிகுந்த கவனம் அவசியம். வீண் செலவுகளை தவிர்க்க முடியும்.

மிதுனம்

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்கள் மேற்கொண்டு வெற்றி கிடைக்கும். பணி தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். புதிதாய் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்

இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இல்லத்தில் வீண்  பிரச்சினைகள் இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சேமிப்புத் தொகை உயரும் கடன் பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

இன்று உடல்நிலை சற்று மந்தமாக காணப்படும். பிள்ளைகளுக்காக சிறிய செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் நன்மை நடக்கும். நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

துலாம்

இன்று கடினமான விஷயம் செயலைக் கூட திறமையுடன் முடித்துக் காட்டுவீர்கள். இல்லத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த கடன் தொல்லைகள் குறைந்து விடும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று அனைத்து செயலிலும் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரம் தொடர்பாக புதிதாய் கருவிகளை வாங்கும் எண்ணம் இன்று நிறைவடையும். பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களால் நன்மை நடக்கும். இல்லத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு ஆனந்தம் பொங்கும்.

தனுசு

இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். இல்லத்தில் அமைதி குறைந்த சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியை செய்து முடிப்பீர்கள். புதிதாய் தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும்.

மகரம்

இன்று எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மன உளைச்சல் இருக்கும். தொழிலில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை குறைத்து விடவும். இல்லத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்

இன்று பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நல்ல பலன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். தொழிலில் இருந்துவந்த பொறாமைகள் விலகிவிடும்.

மீனம்

இன்று நினைத்த செயலை நினைத்தபடியே முடித்துக் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்கள் புதிய உற்சாகத்துடன் பணியை செய்வீர்கள். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக இணைவார்கள்.ras

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |