தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிலும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி அமைச்சர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே கலைத்துக்கொள்ள இருக்கிறோம் என்று கூறியுள்ளார்