சென்னை அருகே இரண்டாவது கணவருடன் சேர்ந்து முதல் கணவனை கொன்ற பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரை அடுத்த அண்ணா இந்திரா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன்களான சந்துரு மற்றும் தயாளன் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தயாளன் தன் மனைவியுடன் என் ஊரில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவருக்கும், சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் தாரணி சில மாதங்களுக்கு முன் தனுஷ் என்ற வாலிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் சந்துருவுக்கும் தாரணி குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தான் கொடுத்த பணம் நகை உள்ளிட்டவற்றை திருப்பி தருமாறு தனது அண்ணன் தயாளனுடன் சேர்ந்து சந்திரனிடம் கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த தாரணி அவரது இரண்டாவது கணவர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து சந்துரு மற்றும் தயாளன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சந்துருவின் தலையிலும், கழுத்திலும் வெட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தப்பி ஓடிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.