Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் முடிஞ்சிருச்சு… 15 ஆம் தேதி முதல் தொடக்கம்… தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு..!!

சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகையாக  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 1571 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 250 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்தது.

Categories

Tech |