Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டோக்கன் தாறோம்….! ”ஒரு புல் மட்டும் வாங்கிக்கோங்க” சேலத்தில் அதிரடி முடிவு ..!!

சேலத்தின் ஓமலூரில் டஸ்மார்க் கடையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று முடிவெடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மொத்தமாக வரக்கூடாது. வயதுக்குக்கேற்ப நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் போலீசார் டாஸ்மாக் விற்பனையாளருடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரை கிலோமீட்டர் முன்பு டோக்கன் வழங்கப்பட்டு மது கடைகளுக்கு செல்லும் மது பிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதே போல டோக்கன் முறையில் ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |