Categories
மாநில செய்திகள்

வீடுகளுக்கே டோக்கன் வரும்…. டிசம்பர் 26-30 வரை – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகையை வீடுகளுக்கே வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்க அரசு உத்தரவு அளித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத் தொகை பெற டிசம்பர் 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்காரணத்தை கொண்டும் ரொக்கப்பணத்தை உறையில் வைத்து வழங்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |