டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர்,வீராங்கனைகள் வருகின்ற 14-ஆம் தேதி டோக்கியோ செல்கின்றனர் .
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தமாக 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் குத்துச்சண்டை, பேட்மிட்டன் ,ஜூடோ துப்பாக்கி சுடுதல் ,நீச்சல் உட்பட 18 விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வருகின்ற 14ஆம் தேதி டோக்கியோ செல்ல இருப்பதாக ஒலிம்பிக் சங்க செயலாளரான ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார் .
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியாளர்கள் , அதிகாரிகள் என மொத்தம் 66 பேரும், போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 115 வீரர், வீராங்கனைகளும் டோக்கியோ செல்ல இருப்பதாக அவர் கூறினார். மேலும் இந்திய அணி டோக்கியோ சென்றதும் அவர்கள் அங்கு 4 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் , நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 10 பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.