Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய நீச்சல் வீராங்கனை மானா படேல் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு  தகுதிப் பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை  மானா படேல் பெற்றுள்ளார்.

கொரோனா தொற்றால்  பாதிப்பால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23 -ம் தேதி முதல் நடைபெற உள்ளது .இதில் இந்தியா சார்பில் 3-வது நீச்சல் வீரராக  மானா படேல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்  இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த  60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கப்பதகத்தை  வென்றுள்ளார்.இதன் மூலம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் நீச்சல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2018- ம் ஆண்டில் நடந்த 22- வது மூத்த தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் அதே ஆண்டில்  திருவனந்தபுரத்தில் நடந்த சீனியர் தேசிய போட்டியில் மானா படேல் கலந்துகொண்டு  அனைத்து  போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன்பாக  இந்திய நீச்சல் வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜன்,சஜன் பிரகாஷ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நீச்சல் வீராங்கனை மானா படேலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |