டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார் .
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் பொலிவியா வீரரான ஹூகோ டெலியனுடன் மோதினார் . இதில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்றுள்ள நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கத்தை வெல்வதுடன் அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தையும் வென்றால் ஒரே வருடத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.