Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

உலகின்  மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது ,இந்த ஆண்டு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்ட கொரோனா  வைரஸ் பாதிப்பால் ,போட்டிகள்  தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில்   பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 95 வீரர்-வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர் . இவர்கள் தடகளம்,ஹாக்கி  குத்துச்சண்டை உள்ளிட்ட 12 விளையாட்டுப் பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.இவர்களில் அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங்,சோனம் மாலிக்,கமல்பிரீத் கவுர் உட்பட 95 வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர் .

Categories

Tech |