Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் பங்கேற்பு ….!!!

பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை  உறுதிப்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் .

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மற்றும் விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதையடுத்து வருகின்ற செப்டம்பரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறகிறது. இந்நிலையில் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்று தங்க பதக்கமும் , அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் , ஒலிம்பிக்கில் தங்கமும் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் இந்த சாதனையை ஜெர்மனியை சேர்ந்த வீராங்கனை ஸ்டெபிகிராப் 1988-ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார்.

Categories

Tech |