Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. பிரபல வீரர் ரோஜர் பெடரர் விலகல் ….!!!

காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த     பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வீரர், வீராங்கனைகள்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறேன். இந்த ஒலிம்பிக் தொடரிலிருந்து விலகுவது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது “என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |