Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…. தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …!!!

ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 18 ஆயிரம் வீரர்களில்  10 ஆயிரம் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள      6 வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சர்  வழங்கினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறும்போது, “விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில்  தமிழக அரசு உறுதியாக உள்ளது .மேலும் ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து   7 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியும் , வெள்ளிப் பதக்கம் பெறும் வீரர்களுக்கு ரூபாய் 2  கோடியும் வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூபாய் 1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |