Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் …. பங்குபெறுவது பற்றி ரபேல் நடால் பேச்சு …!!!

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய கவலையை  தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா  தொற்று  பரவலால்,ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக  நடைபெற்று வருகின்றன.ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளிளிடையே போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

இந்நிலையில் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ரபேல் நடால் கூறும்போது, இது பற்றி தெளிவான தகவல் எனக்கு தெரியவில்லை என்றும், தகவல் தெரியாததால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். இதுவே கொரோனா  வைரஸ் தொற்று இல்லாமல், வழக்கமாக உலகம் இயல்பு நிலையில் இருந்தால்,    நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை தவற விட மாட்டேன் என்று கூறியுள்ளார். வீரர்,வீராங்கனைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிக்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். போட்டி தொடங்குவதற்கு இன்னும் 2 மாத காலம் இருப்பதால், என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |