Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு … இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு முதல் முறையாக, இந்திய வீராங்கனைகள் 4 பேர்  தகுதி பெற்றுள்ளன.

இந்த  மல்யுத்த போட்டி பல்கேரியா நகரில்  நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் , இந்திய வீராங்கனை  சீமா பிஸ்லா, போலந்து நாட்டு வீராங்கனையான அன்னா லூக்காசியாவுடன்  மோதினார். இதில் 2-1  என்ற புள்ளி கணக்கில் சீமா பிஸ்லா, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக சீமா பிஸ்லா (வயது 29), டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் .

இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத்  53 கிலோ எடைப்பிரிவு , அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு , சோனம் மாலிக் 62 கிலோ எடைப் பிரிவு ஆகிய  3 வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். தற்போது 4வது வீராங்கனையாக சீமா பிஸ்லா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு , இந்திய அணி சார்பில் 3வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆனால் இந்த முறை இந்தியாவிலிருந்து முதல் முறையாக, 4 வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Categories

Tech |