Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் தகுதி சுற்றில்…2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால்…ஒட்டுமொத்த இந்திய அணியும் விலகியது …!!!

ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியானது ,கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடக்கிறது .

டோக்கியோ ஒலிம்பிக்  தகுதிச் சுற்றுப் போட்டிக்கு ,இந்திய அணியை சேர்ந்த 15 வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெறுவதற்கு முன், இரண்டு கட்டமாக வீரர்களுக்கு, கொரோனா  பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு முதல் கட்டத்தில் செய்யப்பட்ட கொரோனா  பரிசோதனையில், இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் ,யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்தபோது, இந்திய அணி வீரர்களான அஜய் யாதவ் (73 கிலோ), மற்றும் ரிது (52 கிலோ) ஆகியோருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.டோக்கியோ ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் ,பங்குபெரும் அணிகளுக்கு விதிமுறை ஒன்று விதிக்கப்பட்டிருந்தது .

அதில் தகுதி சுற்று போட்டியில் பங்குபெரும் அணியின் வீரர்கள், யாரேனும் தொற்றால் பாதிக்கப்பட்டால்  ஒட்டுமொத்த அணியும் போட்டியிலிருந்து விலக வேண்டும், என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. தற்போது இந்திய அணியில் 2 வீரர்கள் தோற்றால் பாதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இந்திய அணியும், போட்டியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே தொற்று பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்த, இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா  தொற்றால்  பாதிக்கப்படாத  வீரர்கள் ,விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்தது.

Categories

Tech |