ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் .
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெற்றது .இதில் இந்தியா சார்பில் அர்ஜூன் லால் ஜாட் – அரவிந்த் சிங் ஜோடி கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தகுதி சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் பங்குபெறும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். மீதமுள்ள 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரிபிசேஜ் சுற்றில் பங்குபெறும் .
இதற்கிடையே தகுதிச்சுற்றில் கலந்து கொண்ட இந்திய அணி ஜோடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:40.33 நிமிடங்களில் கடந்து 5-வது இடத்தை பிடித்தது. இதனால் ரிபிசேஜ் சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6:51.36 நிமிடங்களில் கடந்து 3-வது இடத்தை பிடித்தது. இதன்மூலம் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த அரையிறுதி போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.