ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்திய சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 13-ஆம் தேதி கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடல் காணொளி காட்சி மூலமாக வருகிற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கலந்துரையாடலின் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகளை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தவுள்ளார்.இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்ல வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்கின்றார்.