Categories
விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் : இந்தியாவின் பவீனா பட்டேல் …. காலிறுதிக்கு முன்னேறினார் …!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை  பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றார் .

16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது .மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 4-வது நாளான இன்று டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில் , ஜாய்ஸ் டி ஒலிவியராவை எதிர்கொண்டார்.  இறுதியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பவீனா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Categories

Tech |