Categories
விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் : இந்திய வீரர் பிரவீன்குமார் …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 18 வயதான இந்திய வீரர்  பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பிரிட்டன் வீரர் ஜோனதனுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இதில் பிரிட்டன் வீரர் ஜோனதன் 2.10மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் .

Categories

Tech |