பாரஒலிம்பிக்கில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் .
16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பவினாபென் படேல், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த போரிஸ்லாவை எதிர்கொண்டார்.
இதில் 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பவினா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் .இதனால் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார். இதையடுத்து ஆண்களுக்கான வில்வித்தை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார் 699 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச் சுற்றில் அவர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .