Categories
உலக செய்திகள்

இன்னும் 15 நாள்தான் இருக்கு…. ரசிகர்களுக்கு தடைவிதித்த டோக்கியோ….. ஜப்பான் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 15 தினங்களே இருக்கும் நிலையில், டோக்கியோவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 தினங்களே உள்ளது. இதற்கிடையே டோக்கியோவில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு தினந்தோறும் 920 ஆக அதிகரித்துள்ளது. இதனால் டோக்கியோவில் அவசரகால நிலையை பிறப்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி அங்கு தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தல் மற்றும் மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்றவை இரவு 8 மணிக்கு மேல் மூடுதல் என்னும் கட்டுப்பாடுகள் டோக்கியோவில் அமலில் இருக்கும்.

ஆனால் விதியை மீறினால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். இதனையடுத்து கொரோனா பெரும் தொற்று காரணமாக டோக்கியோ போட்டியின் அமைப்பாளர்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளார்கள்.

Categories

Tech |