Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நேற்று தொடக்கம்.. காலிறுதிக்கு முன்னேறிய தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ்..!!

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறினார்கள்.

நேற்று டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடங்கியிருக்கிறது, அதில் அபுர்வி, இளவேனில், மகளிர் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்று தோல்வியுற்றனர். எனினும், வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய நாட்டை சேர்ந்த தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் காலியிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இவர்கள் காலியிறுதி போட்டியில் தென்கொரிய அணியுடன் மோதுகிறார்கள். இந்தியாவை சேர்ந்த முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள், பதக்கங்களை வெல்லும் பல போட்டிகளில் இன்று பங்கேற்கிறார்கள்.

இதில் இந்தியா, குறைந்தது 2 பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும், கட்டாயம், 6 க்கு அதிகமாக பதக்கங்களை இந்தியா பெரும் என்றும், விளையாட்டு வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தியா குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன் மற்றும் துப்பாக்கிச் சுடுதல், போன்ற 18 பிரிவுகளில் களமிறங்கவுள்ளது.

மிரா பாய் சானு, 49 கிலோ எடைப்பிரிவில், பளு தூக்குதலில் பங்கேற்கிறார். மேலும் அபிஷேக் வர்மாவும், சவ்ரப் திவாரியும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், கலந்துகொள்கிறார்கள்.

Categories

Tech |