Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க ….

சுவையான தக்காளி குழம்பு

தேவையான பொருள்கள் :

நாட்டுத் தக்காளி  –   4

பச்சை மிளகாய் – 1

பூண்டு – 2  பற்கள்

சீரகத்தூள் –  1  டீஸ்பூன்

மிளகாய்த்தூள் –   1   1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன்

தனியாத்தூள் – 2 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/2  டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தக்காளி குழம்புக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள  வேண்டும் . கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு , வெங்காயம்  சேர்த்து  நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்க  வேண்டும்.  இதனுடன் அரைத்த தக்காளி,  உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கினால்   சுவையான தக்காளி குழம்பு ரெடி!!!

Categories

Tech |