Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கடையில் வாங்கி ஏமாறாதீங்க …… வீட்டிலேயே Tomato Ketchup செய்யலாம் ….

Tomato Ketchup

தேவையான பொருட்கள் :

தக்காளி –  1/2 கிலோ

சீனி –  1/2  கப்

உப்பு –  1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் –  1/2 டீஸ்பூன்

ஒயிட் வினிகர் – 2  டேபிள் ஸ்பூன்

சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்

Tomato Ketchupக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் தக்காளியை நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும் . ஆறியதும் தக்காளியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் தக்காளி விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும் . இதனுடன் சீனி , உப்பு , மிளகாய் தூள் , ஒயிட் வினிகர் , கரைத்த சோளமாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . கை விடாமல் கிளறி கெட்டியானதும் இறக்கினால் சூப்பரான டொமட்டோ கிட்சப் தயார் !!!

Categories

Tech |