Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தக்காளி சாஸ் ரொம்ப பிடிக்குமா..? அதிகம் சாப்பிடுற ஆளா நீங்க… அப்ப இத பாருங்க..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும்.

சுவைக்கு தக்காளி கெட்சப்

இப்போதெல்லாம் தக்காளி கெட்சப் இல்லாத வீடு என்பதே கிடையாது. ஏனென்றால் மக்கள் அனைவரும் இந்த தக்காளி சாஸ்க்கு அடிமையாகியுள்ளனர். துரித உணவுகளுக்கு சைடிஸ் என்பதோடு, பெரும்பாலானோர் விரும்பும் உணவு வகைகளுக்கும் சைட் டிஷ்ஷாக இந்த தக்காளி கெட்சப் உள்ளது. இது ஊட்டச்சத்துக்கள் காட்டிலும் ரசாயனங்கள் மட்டுமே அதிக அளவில் உள்ளதால் தக்காளி சாஸை அதிக முறை பயன்படுத்தினால் நமக்கு நீரழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

வினிகர் மற்றும் சர்க்கரை

வினிகர் தக்காளி சாஸில் அதிக அளவில் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. இது ரசாயனங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் ஆனது. எனவே தக்காளி சாஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் அற்றதாக உள்ளது. இப்போதெல்லாம் தக்காளி சாஸை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, சேமியா, உப்புமா போன்றவற்றிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதை தயாரிக்கும்போது நிறைய தக்காளி விதை மற்றும் தோலை அகற்றி தக்காளி சாறு வடிகட்டி மீண்டும் சமைக்கப்படுகிறது. பல மணி நேரத்திற்கு மேல் சமைக்கப்படுவதால் மிக உயர்ந்த வெப்பநிலையில் தக்காளியில் உள்ள விட்டமின்களும் சத்துக்களும் நீக்கப்படுகின்றன.

பூஜ்ஜியம் ஊட்டச்சத்து மதிப்பு

தக்காளி கெட்ச்அப் அல்லது தக்காளி சாஸ் எந்த ஒரு புரோட்டீனும் கிடையாது. நார்ச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் மினரல் என எதுவும் இல்லை. தக்காளி சாஸில் சர்க்கரை மற்றும் சோடியம் மட்டுமே உள்ளது. இது எப்போதாவது சாப்பிட்டால் பரவாயில்லை. அடிக்கடி சாப்பிட்டால்தான் உடலில் பாதிப்பு ஏற்படும்.

ஆரோக்கியமான உணவு என்றால் தொடர்ந்து அதை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் குறிப்பிட்ட வைட்டமின் சத்து அதிகரிக்கும். இது போன்ற உணவுகள் உடல் நலனுக்கு நல்லது இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்களை கவனித்து வாங்கவும், உபயோகிக்கவும் வேண்டும்.

Categories

Tech |