சுவையான தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 5
பாசிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகுப் பொடி – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு நன்கு வேக வைத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் நெய் ஊற்றி, வெங்காயம், பாசிப் பருப்பு, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு, சீரகப் பொடி, மிளகுத் தூள், மிளகாய் தூள் மற்றும்அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது மல்லியிலை தூவி இறக்கினால் சுவையான தக்காளி சூப் தயார் !!