கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன .
கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன.
கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.